Description
சஹ்யாத்ரி மலையிலிருந்து வாளுடன் மட்டும் வந்த வீரனல்ல அவன்
மிகப்பெரிய குறிக்கோளுடன் வந்த மாவீரன் அவன்…
மிகச்சிறந்த போராளி, போர் தந்திரங்களில் சிறந்தவர் மற்றும் தக்காணத்தின் சிங்கம் என்று அறியப்படும் சத்ரபதி சிவாஜி குறித்து நிறைய புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. அப்படி எழுதப்பட்டதில் சில நூல்களிலே தான் அவரின் தெற்குப் பயணம் குறித்து விரிவாக எழுதியுள்ளனர். அது மக்களிடமும் குறைவாகவே சென்றடைந்துள்ளன. “தென்னிந்தியாவில் சத்ரபதி சிவாஜி (தொடங்கிய பயணம் – தொடரும் பாரம்பரியம்)” என்ற இந்நூல் கற்கோட்டைகளையும் கோயில்கள் மதில்களையும் தாண்டி, ஒரு மனிதனின் தெய்வீக மற்றும் ஆன்மீகம் குறித்த சமமான தேடல் கொண்ட சத்ரபதி சிவாஜியின் மறக்கப்பட்ட பக்கங்களைக் குறித்து பேசுகின்றது.
இப்புத்தகம் செஞ்சிக் கோட்டையின் உச்சி முதல் திருவண்ணாமலை மற்றும் ஸ்ரீசைல ஆலயத்தின் புனித வீதிகள் வரையுள்ள தென்னிந்திய நிலப்பரப்பு முழுவதும் சத்ரபதி சிவாஜி பயணம் பற்றி விவரிக்கின்றது. கலாச்சாரப் பகிர்வுகள் குறித்தும், சிவாஜி சிறுவயதில் பெங்களூருவில் பெற்ற அனுபவங்கள் குறித்தும், கோல்கொண்டா குதுப் ஷாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் பற்றியும், போருக்கு இடையிலேயும் அவரின் மாறாத தெய்வ பக்தியினால் மதராஸில் (சென்னையில்) அன்னை காளிகாம்பாளின் தரிசனம் பற்றியும் சிலாகித்துப் பேசுகின்றது இப்புத்தகம். தஞ்சாவூரை ஆட்சி செய்தது சத்ரபதி சிவாஜியின் சகோதரர் வென்கோஜி தான், ஆனால் சத்ரபதி சிவாஜியின் தாக்கம் தான் தமிழகம் முழுவதும் பரவியுள்ளது.
இப்புத்தகம் வெறும் கதைப்புத்தகம் அல்ல. தெற்கின் நம்பிக்கை, வீரம் மற்றும் மறக்கப்பட்ட பாரம்பரியம் குறித்த தேடல்களுக்கான பதில். இப்புத்தகம் சத்ரபதி சிவாஜியை பயணம் செய்யும் யாத்திரிகராக, போர் திட்டமிடுபவராக, கட்டிட வடிவமைப்பாளராக, ஆன்மீக தேடல் நிறைந்தவராக, எல்லாவற்றையும் விட என்றும் மக்களின் வாழ்வில் தாக்கம் ஏற்படுத்துபவர் என்று எடுத்துக் கூறுகின்றது.
Pages : 104; Paperback ; ISBN : 978-81983858-7-1 ; Author : Sudhakar Narayanan ; Translated by K. Murugan
Reviews
There are no reviews yet.